ம.பி. முதல்வர் வாகனம் மீது கல்வீச்சு எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Madhya Pradesh CM 03-09-2018

 போபால், மத்தியப் பிரதேசம், சிதி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் மீது விஷமிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில் சவுஹான் ஈடுபட்டிருந்தபோது சுர்ஹாத் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதலில் ஈடுபட்ட தொகுதி, எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங்கின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஷிவ்ராஜ் சிங் சவுஹான் இது தொடர்பாக பேசும்போது, அஜய் சிங், உங்களுக்கு தைரியம் இருந்தால் திறந்தவெளியில் வந்து சண்டையிடுங்கள். நான் உடல்ரீதியாக வலிமை குறைந்தவன்தான். ஆனால் உங்களிடம் தோற்றுவிட மாட்டேன். மாநில மக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அஜய் சிங், நாங்கள் யாரும் கல்வீச்சில் ஈடுபடவில்லை. என் பேரையும் சுர்ஹாத் மக்களின் பேரையும் கெடுப்பதற்காக யாரோ திட்டமிட்டு இவ்வாறு செய்திருக்கிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து