தெரு நாய்கள் குரைப்பால் தூங்க முடியவில்லை லல்லு பிரசாத் புகார்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      இந்தியா
Lalu Prasad yadav 03-09-2018

பாட்னா,ராஞ்சி மருத்துவமனைக்கு வெளியே தெரு நாய்கள் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்கு தன்னை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.வும், லல்லுவுக்கு நெருக்கமானவருமான போலா யாதவ் கூறும் போது:  மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் உள்ளன. அவை இரவில் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருப்பதால், லல்லுவால் தூங்க முடியவில்லை. அத்துடன் கழிவறையிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்கு அவரை மாற்றவேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான தொகையைச் செலுத்தி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லல்லு பிரசாத் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தத் தொற்று, நீரிழிவு மற்றும் வேறுசில நோய்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து