முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் எங்கே போனது?மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு வழங்கிய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைடூரிய நகைகள் எங்கே போனது என்று மத்திய தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கமான பதில் அளிக்க இந்திய தொல்லியல் துறை, ஆந்திர மாநில கலாச்சார அமைச்சகம், திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலையும், அதன் நகைகள், சிலைகள், பாரம்பரிய பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் திருப்பதி கோயிலை தேசியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் சிறீதர் ஆச்சாயர்லு கடிதம் எழுதியுள்ளார்.

பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் மனு பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டும் மனநிறைவான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையரிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஎஸ்ஆர் அய்யங்கார் வலியுறுத்தினார். இதனால் மத்திய தகவல் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து