முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்களுக்கு ஆணையம் அமைக்க கோரும் எம்.பி.க்கு ஆதரவு குவிகிறது

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தங்கள் மனைவியின் கையில் சிக்கி துன்பப்படும் ஆண்களின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக ஆண்கள் ஆணையமும் அமைக்க வேண்டும் என்று மக்களவை எம்.பி. ஹரிநாராயன் ராஜ்பார் கோரிக்கை விடுத்தார். அவரது இந்த கோரிக்கைக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

ராஜபார் மகளிர் தேசிய சட்ட ஆணையம் உள்ளது போல ஆண்களுக்கும் இதைப் போல ஒரு தேசிய சட்ட ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவரது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று அவர் அளித்த பேட்டியில்,

பெண்களுக்கு தேசிய சட்ட ஆணையம் உள்ளது போல் ஆண்களுக்கும் தேசிய சட்ட ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் இதன் மூலம் தங்கள் பிரச்சினைகளைப் பேச ஒரு இடம் கிடைக்கும். மனைவிமார்களின் கைகளில் சிக்கி சீரழியும் ஆண்களை நாம் இதற்போது நாம் பார்த்து வருகிறோம். எனவே யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, ஆண்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போது நாடுமுழுவதும் இவர் ஆண்களின் ஆதரவைப் பெற்றேன். இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 5000-க்கும் மேற்பட்ட ஆதரவு செய்திகள் எனக்கு வந்து குவிந்தன.

ஆண்களுக்கும் ஒரு சட்ட ஆணையம் அமைக்க வேண்டுமென்ற எனது யோசனைக்கு வெளிநாடுகளிலிருந்தும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஹரிநாராயன் ராஜ்பார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து