மாநகராட்சியின் கட்டிட வரைபட அனுமதி அளவை விட கூடுதலாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஆணையாளர் உத்தரவு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      மதுரை
mdu corp news

 மதுரை,- மதுரை மாநகராட்சி மண்டலம்; எண்.1க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.69.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.17 எல்லீஸ் நகர் பூந்தோட்டம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடை பிரதான குழாய் புதுப்பித்தல் பணியினையும், வார்டு எண்.22 கோச்சடையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் கூடத்தினையும், வார்டு எண்.20 வளர்மதி தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் காளவாசல் முதல் வளர்மதி தெரு வரை மழைநீர் வடிகால் அமைத்தல் பணியினையும், வார்டு எண்.13 கரிமேடு மீன்மார்க்கெட்டில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தினையும், சிவானந்தம் சாலை விக்னேஷ் அவென்யூவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் என மொத்தம் ரூ.69.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். கோச்சடை உரக்கூடத்தில் காய்கறி வெட்டும் இயந்திரத்தினை பொருத்தி அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டிகளிலிருந்து காய்கறி கழிவுகளை சேகரித்து இயந்திரத்தில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி உர கூடத்தில் இடுமாறு கூறினார். கரிமேடு மீன் மார்க்கெட்டில் ஆய்வின்போது கழிப்பறை கட்டி தருமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அங்குள்ள காலியிடத்தில் கழிப்பறை கட்டி தருமாறு உத்தரவிட்டார்.
மேலும் ஆய்வின் போது எல்லீஸ் நகர், பைபாஸ் சாலை, அரசரடி ஹார்விநகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் கட்டிட வரைபட அனுமதி அளவை விட கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களின் கட்டுமான பணியினை நிறுத்தி கட்டிடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவி செயற் பொறியாளர் (திட்டம்)  .சுப்பிரமணி, சுகாதார அலுவலர்  விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள்   .கோபால்,  .நாகராஜ், உதவிப்பொறியாளர்கள்  மதி.மல்லிகா,  .ஆறுமுகம், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து