மேலூரில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் வரவேற்பு.

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      மதுரை
melur news

மதுரை- மேலூரில் கடந்த சிலமாதமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி  விபத்து ஏற்பட்டது . மேலூர் பஸ்நிலையம் முதல் அரசுகலைகல்லூரி வரை இருபுறமும்  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது மேலூர் போலீஸ்துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையில் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர் சீனிவாசன் , நகராட்சி கமிஷனர் கண்ணன், தாசில்தார் சரவனண், ஆகியோர் முன்னிலையில், வருவாய் ஆய்வாளர் ராஜா,  சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை  அகற்றப்பட்டன,ஆக்கிரமிப்பு அகற்றத்தை அந்தபகுதி மக்கள் வரவேற்று  அதிகாரிகளை பாராட்டினர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து