கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
jayakumar 2018 8 14

சென்னை, கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக டி.டி.வி. தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள

குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-உதவி செய்யலாம்...பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மாநில அரசின் வருவாய் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதனை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு தான் ஜி.எஸ்.டி. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.30 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ரூ.30 ஆயிரம் கோடியை இங்கு செலவு செய்யலாம்? அந்த பணத்தை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏழை- எளிய மக்களுக்கு நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி செய்யலாம்.

எப்படி வருவாய் வரும் ? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாம் ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.யாக மத்திய அரசு பெற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு எப்படி வருவாய் வரும். மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. அதனை நண்பர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதை வாங்கி தந்தால் அவர் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

கருப்பு பணத்தை வெள்ளை...தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார். ஒரு பழமொழி சொல்வார்கள். “சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது”. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து