முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடம்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

937 புள்ளிகள்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். 937 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார். தனது கிரிக்கெட் வரலாற்றில் 937 புள்ளிகளை விராட் கோலி எட்டுவது இதுதான் முதல் தடவையாகும்.

புஜாரா முன்னேற்றம்...

சவுதாம்படன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 46 ரன்களும் ,2-வது இன்னிங்சில் 58 ரன்களும் விராட் கோலி அடித்தன் மூலம் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ளார். அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 132 ரன்கள் சேர்த்த புஜாரா, 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து