முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

32 சதங்கள்...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்டுடன் ஓய்வு பெறுவதாக குக் அறிவித்துள்ளார். 33-வயதான குக், 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்கள் அடித்துள்ளார்.  அதேபோல், 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குக், 5 சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் திகழந்து வந்த குக், கடந்த 2016 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

தடுமாற்றம்...

சமீப காலமாக பார்ம் இன்றி தவித்து வரும் குக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதனால், அணியில் குக்கின் இடம் கேள்விக்குள்ளான நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து