அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நடால் - டொமினிக் தீம் மோதல்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      விளையாட்டு
Nadal-Domnic Theme 2018 9 3

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் அவர் டொமினிக் தீமுடன் மோதுகிறார்.

நடால் அபாரம்...

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் பாசிலாஷ்விலியும் மோதினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை  கைப்பற்றினார்.

3 மணி நேரம்....

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார். இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

டொமினிக் தீம் ...

மற்றொரு 4-வது சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் மோதினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டொமினிக் தீம் அபாரமாக விளையாடினார். இதனால் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டிலும் டொமினிக் தீம் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 6 -2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(2) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

காலிறுதியில் மோதல்

இறுதியில், டொமினிக் தீம் 7-5 6-2 7-6(2) என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் டொமினிக் தீம் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் அல்லது நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து