15-வது நிதிக் குழு தமிழகம் வருகை: 6-ம் தேதி முதல்வருடன் ஆலோசனை

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
edappadi palanisamy 30-08-2018

சென்னை, மத்திய அரசு அமைத்துள்ள 15-வது நிதிக் குழு, தமிழகத்தில் நாளை முதல் பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், முதல்வா் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு 15-வது நிதிக் அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரரி நந்த்கிஷோர்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் முழு நேர உறுப்பினா்களாக தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆலோசனை இந்தக் குழுவின் பரிந்துரைகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு மாநில வாரியாக வேளாண்மை, வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை நிதிக்குழு ஆராய உள்ளது. 15-வது நிதிக்குழு நாளை முதல் தனது பயணத்தை தமிழகத்தில் தொடங்குகிறது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்த நிதிக் குழு ஆலோசனை நடத்துகிறது. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் உள்ளிட்டவை குறித்து கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளை குழு கேட்டறிய உள்ளது.

முதல்வருடன்...இதைத் தொடார்ந்து, தலைமைச் செயலகத்தில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் கிரிஜாவைத்தியநாதன், அரசுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள், துறை முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நிதிக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

களப்பணிகளை... கடந்த காலங்களில் தமிழகத்துக்கு நிதிக் குழு பரிந்துரைத்த அம்சங்கள், அதனால் கிடைத்த நிதி வகைகள், 15-வது நிதிக் குழுவில் வரைவு செய்யப்பட்ட அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகள், அரசுத் தரப்புகளில் ஆலோசனைகளை முடித்த பிறகு, தென் மாவட்டங்களில் களப் பணிகளை நிதிக் குழு மேற்கொள்ள உள்ளது.

தேவையான நிதி...ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள், மத்திய அரசின் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த ஆலோசனைகள், ஆய்வுகளின் அடிப்படையில் நிதிக் குழுவின் சார்பில் தமிழகத்துக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து