விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-க்குள் செயல்படுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
ISRO shivan 2018 3 18

ஆலந்தூர்,2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். பிரதமர் ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார். அதன்படி 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். பி.எஸ்.எல்.வி. பி42, ஜி.எஸ்.எல்.வி.பி2 விண்கலங்கள் அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்படும். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான செயலி பருவமழை முடிந்தவுடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து