காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைமத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது கர்நாடகா

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      இந்தியா
karnataka govt 2017 12 25

புது டெல்லி,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் எதிர்ப்பு:காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்சினை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அறிக்கை சமர்ப்பிப்பு:இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த வாரம் தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், திட்டம் குறித்து மாநிலங்களிடையே விளக்கக் கூட்டத்தை கர்நாடக அரசு விரைவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இதுகுறித்த தெளிவான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Chilli Mushroom 65 | Mushroom recipes | Fried Mushrooms | Samayal in Tamil | Veg Recipes

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் தென்னை சாகுபடி

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து