சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தினரை புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகம்: மருத்துவ ஆய்வு நிபுணர்கள் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
Cigarette

சென்னை, புகை பிடிப்பவரை விட, அருகில் அதனை சுவாசிப்போருக்கும், வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் 50 சதவீதம் பாதிப்பு நிச்சயம் வரும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற “புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு” பேரணியில் பங்கேற்ற ஆய்வு நிபுணர்கள் இதனைத் தெரிவித்தனர். கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், புகையிலைக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மனிதர்களுக்கு உண்டாகும் புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருந்தாலும், பிரதான காரணமாக இருக்கும் புகைப் பிடித்தலை விட வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தினர். பேரணியில் பங்கேற்ற மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கூறும்போது, “இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர்.

இவர்களுக்கு 80 முதல் 90 சதவிதம் வரையில் நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. இவர்களில் 30 சதவீதம் பேர் இந்தப் பழக்கத்தினாலேயே மரணிக்கின்றனர் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. வீட்டில் இவர்கள் புகைப்பிடிக்கும்போது மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பத்தாரும் 50 சதவீதம் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதும், இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதுமே இந்தியர்களின் ஆரோக்கிய வாழ்க்கையை உறுதி செய்யும்,” என்று வலியுறுத்தினர்.

பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள், புகைப்பிடித்தலின் தீமைகள் குறித்தும், அது குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் வீதி நாடகம் நடித்துக் காட்டினர். முன்னதாக, திரைப்பட நடிகை யுவராணி கலந்து கொண்டு கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். புகைப்பிடித்தலின் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதற்கான சிகிச்சைகளை அளித்து வரும் வில்சன் நியூட்ரி வேல்டு நிறுவனம் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து