முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாவட்டங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து ஐதராபாத்திலுள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்ட மாதிரி பயிற்சியினை நாளை நடத்துகின்றது.

இந்த மாதிரி பயிற்சிக்கு ‘இந்திய பெருங்கடல் அலை 2018 பயிற்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் முன்னோட்டமாக சென்னை வருவாய் நிருவாக ஆணையர், மாநில நிவாரண ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை, கடலோர பாதுகாப்பு காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பயிற்சி ஒத்திகையானது சென்னை சீனிவாசபுரம் வார்டு 173-ல் மற்றும் பனையூர் குப்பம் வார்டு 198-ல் நாளை நடைபெற உள்ளது.இதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கோட்டம் திருப்போரூர் வட்டம் கானாத்தூர்ரெட்டி குப்பத்தில் சுனாமி ஒத்திகை பயிற்சியானது நடைபெற உள்ளது.

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான நடுக்குப்பம், மந்தவாய்புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், செருதூர் மற்றும் தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடி ஆகிய கிராமங்களில் இன்று மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பொது மக்கள் அரசினால் அறிவிக்கப்படும் சுனாமி அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பவேண்டும் என்றும், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒரு ஒத்திகை நிகழ்ச்சியே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பொது மக்கள் அச்சம் அடையும் வகையில் எவரேனும் தேவையற்ற வதந்திகளை பரப்பினால், அவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து