பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதலாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
sengottaiyan 2017 8 20 1

 சென்னை, பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதலாம். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுதேர்வு மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து