கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிவஞானம் பரிசு வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      விருதுநகர்
4 vnr pro

 விருதுநகர்,- விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் 2018-19ம் ஆண்டிற்கு 11, 12ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம். பரிசுத்தொகையினை வழங்கினார்கள்.
 தமிழகப் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்புத்திறனை வெளிக்கொணரும் நோக்கில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
 அதன்படி நடைபெற்ற போட்டிகளில், கவிதைப்போட்டியில் திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ம.சுவீட்டி சுவேதா முதலிடத்தினையும், மே.சின்னையாபுரம் மே.சி.நா.உ.பே.தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி பே.இராஜலட்சுமி இரண்டாமிடத்தினையும், விருதுநகர் ஸ்ரீவித்யா பதின்ம  மேல்நிலைப்பள்ளி மாணவி வே.திவ்யா மூன்றாமிடத்தினையும், கட்டுரைப்போட்டியில் வி.எம்.ஜி.இராஜசேகரன் இரமணி ஸ்ரீசாரதா சக்தி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஆ.நந்தினி முதலிடத்தினையும், திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செ.ஜோதிகா இரண்டாமிடத்தினையும், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி மாணவன் கு.திருச்செந்தில் மூன்றாமிடத்தினையும், பேச்சுப்போட்டியில் இராஜபாளையம் ஸ்ரீரமணா வித்யாலயா மாணவி இரா.நேகமீனா முதலிடத்தினையும், விருதுநகர் ஸ்ரீவித்யா பதின்ம  மேல்நிலைப்பள்ளி மாணவி மு.ஜெயஸ்ரீ இரண்டாமிடத்தினையும்,  திருவில்லிபுத்தூர் திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கு.விஷ்ணுப்பிரியா மூன்றாமிடத்தினையும் பெற்றனர்.
 இப்போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
 இந்நிகழ்வுகளில் விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  சுசிலா உட்பட  பள்ளி மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து