தீபாவளி பண்டிகை- அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
diwali bus 2018 9 4

சென்னை,தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1000 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பெரும்பாலனவை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள். நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.  இந்த நிலையில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 புதிய பஸ்கள் விடப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 40 பஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் கூட்டம்:படுக்கை வசதியுடன் முதன் முதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசிநேர பயணமாக பஸ் பயணத்தை மேற்கொள்கிறார்கள்  தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. மேலும் முன்பதிவு இன்றும் நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம்.

அதிகாரிகள் நம்பிக்கை:தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடிய நிலை இருப்பதால் அவற்றில் இருந்து தப்பிக்க அரசு பஸ்களில் முன்பதிவு இப்போதே செய்து கொள்ளலாம். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் தீபாவளி முன்பதிவு சிறப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-125 மையங்கள் அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம். 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன.

இதில் சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து