ஒட்டன்சத்திரம் பெத்தேல்புரத்தில் யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
4 odc news

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த பெத்தேல்புரத்தில் யா னைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். பெத்தேல்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்குள் அடிக்கடி யா னை புகுந்து குடிசைகளையும், விளை நிலங்களையும் மிதித்து சேதப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஊருக்குள் வந்த யா னை அங்குள்ள ரேசன் கடை ஓடுகளை பிரித்து சேதப்படுத்தியது. மேலும் அருகே இருந்த பள்ளியில் நடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து யா னையை விரட்டினர். இதே பகுதியில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யா னை ஒருவரை மிதித்து கொன்றது. இப்பகுதியில் அடிக்கடி யா னைகள் புகுந்து, விலை நிலங்களையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருவது அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யா னையிடமிருந்து மக்ககளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து