ஆசிரியர் பணி சிறக்கட்டும் ! அறிவோங்க தமிழ்நாடு உயரட்டும் முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
edappadi palanisamy 30-08-2018

 சென்னை,இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி ஆசிரியர் பணி சிறக்கட்டும், அறிவோங்க தமிழ்நாடு உயரட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பணி சிறக்கட்டும்:ஆசிரியராக பணியை தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் உயரட்டும்:அத்துடன், இந்நன்னாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து