ஸ்டெர்லைட்: பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது வரும் திங்கட்கிழமை விசாரணை

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
sterlite close 2018 5 28

புது டெல்லி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.  இந்த மனுவை அவசர மனுவாக இன்று விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து