பருவமழை ஓய்ந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியானது

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
mullaperiyar dam water lever rise 2018 8 14

கம்பம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியிலிருந்து படிபடியாக குறைந்து 136 அடியாகியுள்ளது.

ஒரேநாளில்...முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி, தேக்கடியில் பருவமழை ஓய்ந்ததால் அணை நீர்மட்டமும் தொடர்ந்து கீழிறங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி 136 அடியை தொட்ட அணை நீர்மட்டம் கனமழையால் ஒரே நாளில் 142 அடியானது.

மேலும் சரியும்...அதற்கு பின் மழை தொடர்ந்து குறையவே, 20 நாட்களுக்குப் பின் தற்போது அணை நீர்மட்டம் 136 அடியாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு 2,207 கன அடியாக உள்ளது. நீர்வரத்தை விட நீர்த்திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் மேலும் சரிந்து வருகிறது. அணையில் நீர் இருப்பு 6,156 மில்லியன் கன அடியாக உள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து