ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்!

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      உலகம்
Haqqani Leader dead 2018 9 4

தலிபான் : காபூல், செப். 5-

ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானி, உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக தலிபான் தெரிவித்துள்ளது.

கடும் போர்...

பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஹக்கானி பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின் றன. இந்த அமைப்புகள் ஆப்கான் அரசுக்கு எதிராக கடுமையாக போரிட்டு வருகின்றன. இந்நிலையில் ஹக்கானி அமைப்பை நிறுவிய மவுலா வி ஜலாலுதீன் ஹக்கானி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது.

தலிபான்...

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் மகன் சிராஜூதின் ஹக்கானி அந்த அமைப்புக்கு தலைமை தாங்கி நடத்தி வருவதாகவும் ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. 1980களில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆதரவுடன் போராடியவர் என்றும் அரபு ஜிகாதிகள் பின்லேடன் உள்ளிட்டவர்களுடன் ஜலாலுதீன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் தலிபான் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து