ஓரின சேர்க்கை புகார்: முதன்முறையாக மலேசியாவில் 2 பெண்களுக்கு பிரம்படி தண்டனை

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      உலகம்
Malaysia flogs lesbian couple 2018 9 4

கோலாலம்பூர் : மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முறைகேடான...

முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்’ )ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் ‌ஷரியா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்தார்.

பிரம்படி தண்டனை

மேலும் அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது கோர்ட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதுவே முதன்றையாகும். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு கொடுஞ்செயல் என கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து