காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      விளையாட்டு
RaviShastri 2018 9 4

இந்தி நடிகையை காதலித்து வருவதாகக் கூறப்படும் செய்தி பற்றி கேட்டதால் ரவி சாஸ்திரி கோபமானார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது. இந்த கவலையில் இருக்கிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்நிலையில் இவரும், இந்தி நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருகிறார்கள் என்றும் இருவரும் பிசியாக இருந்ந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வருடமாக இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் ஒன்றாக வெளி இடங்களில் சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தி பரபரப்பானது.  இதுபற்றி ரவிசாஸ்திரியிடம் கேட்டபோது, கடுப்பானார். ‘குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாட்டு சாணம் பற்றியெல்லாம் பேச விருப்பமில்லை’ என்ற அவரிடம் திரும்பவும் கேட்டபோது, ‘இதற்கெல்லாம் மாட்டுச்சாணம் பதிலளிக்கும்’ என்று கோபமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து