முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானை தாக்கிய அசுர புயல்: 10 பேர் பலி - ரயில் சேவை, படகு போக்குவரத்து பாதிப்பு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத கடுமையான புயல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் இஷிகாவாவில் திடீரென புயல் வீசியது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால், வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைக்குப்புற கவிழந்தன.

ஒசாகா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் கரைப்பகுதியை தாக்கியதில் பாலம் ஒன்று சேதம் அடைந்தது. பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் கரைப்பகுதியில் புகுந்தது. கான்சாய் விமான நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன. புல்லட் ரயில் உள்ளிட்ட ரயில் சேவையும், படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து