பாகிஸ்தான் புதிய அதிபராக ஆரிப் ரஹ்மான் தேர்வு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Arif Rahman 2018 9 5

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அதிபர் மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதையொட்டி புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ரஹ்மான் ஆல்வி வெற்றி பெற்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

ஆரிப் ஆல்வி தனது வெற்றி உரையில், மிகப் பெரிய பொறுப்புக்கு என்னை நியமித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி. அவரது 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகளின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படும் என நம்புகிறேன். ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி அனைத்து கட்சிகளுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதிபராக செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து