வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கேட்க தேவையில்லை - கத்தாரில் புதிய விதி அமல்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Qatar new rule 2018 9 5

டோஹா : கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் லட்சக்கணக்கில் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். முக்கியமாக தமிழர்களும், மலையாளிகளும் அதிக அளவில் பணி புரிகிறார்கள். இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் நாடு திரும்ப நிறைய விதிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது. உடனே நாடு திரும்ப இவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதனால் இந்த கத்தாரின் குடியமர்வு விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க அந்த விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பப்படி நாட்டைவிட்டு கிளம்பலாம் என்று சட்ட விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கத்தாரின் டோஹாவில் 2022-ல் நடக்க உள்ள கால்பந்து உலகக் கோப்பை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து