மலையாள எழுத்தாளரின் நாவலுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Malayalam novelist 2018 9 5

புது டெல்லி : சர்ச்சைகளை ஏற்படுத்திய மலையாள நாவலான மீஷாவைத் தடை செய்ய மறுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எழுத்தாளர்களின் கற்பனைக்குத் தடை விதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் எஸ். ஹரீஷ் என்பவர் எழுதிய மீஷா நாவலின் அத்தியாயங்கள் வெளியாகின. அவை இந்து அர்ச்சகர்கள் மற்றும் பெண்கள் குறித்துத் தவறாக சித்தரிப்பதாகக் கூறிப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மீஷா நாவலின் சில பகுதிகளைத் தடை செய்ய வேண்டும் என்று டெல்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவற்றுக்குத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மறுத்து விட்டது. எழுத்தாளர்களின் சுதந்திரமான கற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இலக்கியப் படைப்புகளைத் தடை செய்ய இயலாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து