முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயிலில் பெற்றோரை பிரிந்த மாற்றுத்திறனாளி சிறுவன்: 3மணி நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ப்பு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெற்றோரைப் பிரிந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் மூன்று மணி நேரத்தில் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறை இணை ஆணையர் (மெட்ரோ) தீபக் கௌரி கூறுகையில், "ரிதாலா மெட்ரோ ரயில் நிலையத்தில்  2.30 மணியளவில் ஒரு சிறுவன் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்ததை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், டெல்லி போலீஸாரும் கண்டனர்.

அவரால் வாய் பேச முடியாது என்பதும் செவி கேட்காது என்பதும் விசாரத்ததில் தெரியவந்தது. உடனடியாக அவரது பெற்றோரைக் கண்டுபிடிக்க ரிதாலா மெட்ரோ ரயில் நிலைய காவல் நிலையத்தின் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் சிறுவனை மெட்ரோ ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று அடையாளம் கண்டனர். மூன்று மணி நேர விசாரணையில் அந்த சிறுவனின் வீடு மங்கோல்புரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்பத்தினரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரது பெயர் லேகி என்பது தெரியவந்தது' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து