எங்கள் குடும்பத்தில் அரசியலில் மட்டுமே பிரச்சனை: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      தமிழகம்
Alagiri 2018 07 08

சென்னை, எனக்கும் தம்பி ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அழகிரி பேசுகையில், கருணாநிதி இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரது விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு நடைபெற்றது. வேறு எந்த நோக்கமும் கிடையாது.

என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை.
எனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியல் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை என கூறினார்.

மேலும், கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறிய அவர் பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து