யாத்திரையின் போது அசைவம் சாப்பிடுவதா? ராகுலுக்கு பா.ஜ.க. கண்டனம்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Rahul Gandhi 2017 06 03

புது டெல்லி : கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையின் போது அசைவ உணவுகளை சாப்பிட்டு இந்துக்களின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ம் தேதியன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்றிரவு அங்குள்ள வூட்டு ஓட்டலில் ராகுல் நண்பர்களுடன் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டது பற்றி உள்ளூர் பத்திரிகை ஒன்று அந்த ஓட்டல் ஊழியரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது. ராகுல் அசைவ உணவு வகைகளையும் சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக  அந்த ஊழியர் தெரிவித்தது பத்திரிகையில் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக் களின் உணர்வை ராகுல் புண் படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டதைக் கண்டிக்கிறோம் என்றார்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து