முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் வ.உ.சி. சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் வ.உ.சி. சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செக்கிழுத்த செம்மல், தேசியத் தலைவர், கவிஞர், சுதந்திர போராட்ட தியாகி என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தமான வ.உ.சிதம்பரனாரின் 147வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு வ.உ.சி சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு டிரஸ்ட் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஆh.எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் தனபாலன், பொருளாளர் கணேசன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயரும் அ.தி.மு,க மாவட்ட செயலாளருமான வி.மருதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து பேசுகையில், வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அவர் அளித்த சேவையையும் பஙகாற்றி பேசினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள் ராஜேந்திரன், 3வது வார்டு செயலாளர் ராஜ்மோகன், 8வது வார்டு செயலாளர் வீரமார்பன், சுரேஷ்குமார், சுப்பிரமணி, சேசு, மருதநாயகம், ராமலிங்கம், நல்லையா பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு அமைப்பினர் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து