டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் மாணவிகளுக்கு பாராட்டு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
5 btl news

வத்தலக்குண்டு- டேபிள் டென்னிஸ்  விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில்  முதலிடம் மாணவிகளுக்கு பாராட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் சௌந்தர்யா, யுவபிரபா ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் மலர்வண்ணன், ஆசிரியை தங்கமீனா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. 19 வயதிற்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் யுவபிரபா முதலிடம் பெற்றார். இரட்டையர் பிரிவில் சௌந்தர்யா, யுவபிரபா அணி முதலிடம் பெற்றது.
விழாவிற்கு பள்ளிகளின் மேலாண்மைக் குழுத் தலைவர் ராஜாராம், தலைமையேற்று மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஐந்து பள்ளிகளின்  கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் மோகன் அருணாச்சலம், பள்ளித் தலைவர் பொன்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலளர் வெங்கடேசன் வாழ்;த்துறை வழங்கினார்.
எச்.என்.யூ.பி சங்க துணைத் தலைவர் காமராஜ், செயலர் சங்கரலிங்கம், மெட்ரிக் பள்ளித் தலைவர் கருணாகரன், தொடக்கப்பள்ளிச் செயலர் முருகானந்தன், ஆண்கள் பள்ளிச் செயலர் அய்யனார், வெங்கடஷே;, மெட்ரிக் பள்ளி செயலளர் சிவசங்கர், (எ) பிரசன்னா ஆகிய பள்ளிகளின் நிர்வாகிகள் விழாவில் பங்கு பெற்றனர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியை வசந்தா வரவேற்றார். உதவி தலைமையாசிரியர்கள் புஷ்பராணி, டி.வசந்தா, பொன்செல்வி, உடற்கல்வி ஆசிரியைகள் சுபாதேவி, கலைச்செல்வி மற்றும் பலரும் விழாவில் பங்கு பெற்றார்கள்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து