ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்கள் தினவிழா

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      விருதுநகர்
5 rajapalayam news

   ராஜபாளையம் - ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில்  பல துறைகளில் சாதனை புரிவதற்கு வித்தாக விளங்கும் டாக்டர் இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாகிய ஆசிரியர்  தினவிழா பள்ளி தாளாளர் திரு.செ.குமரேசன் தலைமையில் பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர். திருமதி. சித்ரா குமரேசன், பள்ளி  நிர்வாக அதிகாரி திரு. அரவிந்த் , நிர்வாக அதிகாரி   திருமதி. அமுதா தலைமையில்  பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கலாதேவி , உதவி தலைமை ஆசிரியை திருமதி. ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியை செல்வி. வித்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் மாணவர்களால் நடத்தப்பட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் மாணவன் ஜினேஸ் ஆனந்த் நன்றியுரை நல்கினார்.  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி   திருமதி அமுதா தலைமையில்; அனைத்து ஆசிரியைகளும் சிறப்பாகச்செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து