முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் போராடி வெற்றி

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் நடால் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை கடுமையாக போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தார்.

கடும் போராட்டம்...

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) கால் இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார். இதன் முதல் செட்டை நடால் ஒரு புள்ளி கூட பெறாமல் 0-6 என்ற கணக்கில் இழந்தார். அதற்கு அடுத்த இரண்டு செட்டை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4-வது செட்டை டொமினிக் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது செட்டை நடால் கைப்பற்றி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5),

டெல்போட்ரோவுடன்...

நடால் இந்த வெற்றியை பெற மிகவும் கடுமையாக போராடினார். 4 மணி 48 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே அவரால் வெற்றிபெற முடிந்தது. நடால் அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா)வை சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து