முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம் 6.7 ரிக்டராக பதிவு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவில் நேற்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலர் மாயமாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தீவிலுள்ள டோமரி அணுமின்நிலையத்தில் இயங்கி வரும் மூன்று உலைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும், மாற்று ஜெனரேட்டர் வசதியுடன் மின்சாரம் வழங்கப்படும் என ஜப்பான் அணுமின்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு வசதிகளும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய புல்லட் ரயிலின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர்சேதங்கள், பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து