மேற்கு வங்க மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
kolkata flyover collapse 2018 09 06

கொல்கத்தா, கொல்கத்தா மெஜர்ஹெட் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

கொல்கத்தாவில் வைர துறைமுக சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டு பழமையான மெஜர்ஹெட் பாலம்  திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காணாமல் போனதாகவும், மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது.

பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் போலீஸாரும், அரசு நிர்வாகத்தரப்பினரும் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாலம் இடிந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

இடிந்து விழுந்த மெஜர்ஹெட் ரயில் நிலையத்தையும், அலிபோர் பகுதியையும் இணைப்பதோடு, நகரின் மையப்பகுதியான பாஹலா, வஸ்ட் மற்றும் தென்மேற்கு புறநகர் பகுதியையும் இணைக்கும் முக்கியமான பாலமாகவும், தெற்கு 24 பார்ஹனாஸ் மாவட்டங்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இடிபாடுகளில் சிக்கியதாக ஒரு மினி பேருந்து, 4 கார்கள் மற்றும் சில இரு சக்கர வாகனங்கள் இதுவரை கிரேன் மூலமாக மீட்கப்பட்டுள்ளன. பாலம் இடிந்த சம்பவம் குறித்து தலைமை செயலர் மாலே டி தலைமையில் விசாரணை நடத்தவும் முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து