அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ வைரல்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      உலகம்
USA  Video Viral 06-09-2018

நியூயார்க்,அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படி விமானத்தில் மீன்களை கொண்டு சென்று கடலில் போடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

இதுகுறித்து தற்போது இணையத்தில் நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்து இப்படி மீன்கள் வீசுவது விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் நிறைய ஏரிகள் உள்ளது. மலை பகுதி என்பதால் இங்கு ஏரிகள் தனி தனியாக இருக்கும். மற்ற நீர் நிலைகளுடன் தொடர்பற்று தனியாக இருக்கும். நிறைய பேர் இங்கு மீன் பிடிக்க வருவார்கள்.

இதனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு எப்போதும் இங்கு மீன்கள் தீர்ந்து விடும். மீண்டும் மீன்கள் உருவாகும் வரை சுற்றுலா பயணிகளை காத்திருக்க வைக்க வேண்டும் என்று இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கி உள்ளனர். இதற்காக விமானத்தில் மிக சிறிய அளவில் இருக்கும் மீன்களை எடுத்து செல்கிறார்கள். அதன்பின் ஏரிகளுக்கு அருகே சென்று, எவ்வளவு தாழ்வாக செல்ல முடியுமோ அவ்வளவு தாழ்வாக சென்று, மீன்கள் இருக்கும் பெட்டியை திறந்து விடுகிறார்கள். இதன் மூலம் எல்லா ஏரிகளுக்கும் மீன்கள் மீண்டும் நிரப்பப்படும்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து