முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். எஸ்.வி.சுப்பையா, கருப்பு சுப்பையா என்ற பல நடிகர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே நடித்து வந்தவர்கள். அதனால் நடிக்க வந்த புதிதில் சுப்பையா, தனது பெயரை வெள்ளை சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாது 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர். மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி என்ற பாடலில் ஸோலாவாக ஆடி பாடி நடித்து கலக்கினார். இயக்குனர் வி.சேகரின் ஆஸ்தான நடிகர். கவுண்டமணியின் வாழைப்பட காமெடியில் குரூப்பில் வெள்ளை சுப்பையாவும் பிரதானம்.

கொஞ்ச வருடங்களாகவே இவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை. அதனால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு வந்து விட்டார். இந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது. அப்போது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது கேன்சர் கட்டி என தெரியவந்தது. ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கூட நிதியுதவி கேட்டிருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் அவர் நேற்று காலமானார். வெள்ளை சுப்பையா மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து