7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
jayakumar 2018 8 14

சென்னை,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக கவர்னரிடம் பரிந்துரைக்கலாம் என்றும் சுப்ரிம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 7 பேரையும் தமிழக அரசு விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 15-வது நிதிக்குழு கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து