குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      விருதுநகர்
6 vnr pro news

 விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குப்பாம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை   யினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  திறந்து வைத்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:-
தமிழக அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்கான எண்ணற்ற பல சிறப்புத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்கள் படித்தால் மட்டும் போதும்  என்ற அளவிற்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.                        
        இந்த கிராமத்தில் ஊரட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக 1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் சிறப்பான கல்வி சேவையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கற்றல் திறனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப வகுப்பறையை ஆசிரியர் பங்களிப்பு ரூ.70 ஆயிரமும், பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.70 ஆயிரமும்  என மொத்தம் ரூ.140000  மதிப்பிட்டில் உருவாக்கி, அந்த வகுப்பறை 2017 ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரவலர்த் திட்டம் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தொடர்ந்து புரவலர்களின் பங்களிப்பு வந்த வண்ணம் உள்ளது.
        .    கல்வி தொடர்பான ஆன்ட்ராய்டு ஆப் மூலமாக மாணவர்கள் விளையாட்டு முறையிலும், விருப்பத்துடனும் மிகவும் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள “தாய் எனப்படும் தமிழ்”  என்ற தலைப்பில் அடங்கிய குறுந்தகட்டின் மூலம் 1-ம்  வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 42- க்கும் அதிகமான தமிழ் பாடங்களை மிகவும் எளிதாக கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களுக்கு பாடம் சம்மந்தமாக எந்த ஒரு சந்தேகமானாலும் இணையதளம் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது. தமிழகத்திலேயே முதன் முதலாக பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்புடன் குளிர் சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை வகுப்பறை செயல்படுவதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் இனிமையான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  சுவாமிநாதன், மா , அரசு அலுவலர்கள உட்பட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து