முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 ஆண்டுகால குடும்ப ஆட்சியில் சாதித்தது என்ன?ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்கும் ராகுல் காந்தி, தங்கள் குடும்பத்தினரின் 60 ஆண்டுகால ஆட்சியில் சாதித்தது என்ன? என்பதை முதலில் விளக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், வாஜ்பாயின் பெயரில் மாநில முதல்வர் ரமண் சிங் மக்கள் சந்திப்பு யாத்திரை நடத்தி வருகிறார். யாத்திரையின் இரண்டாவது பகுதியை, அமித்ஷா குர்ருபட் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 65 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். சத்தீஸ்கரில் பா.ஜ.க. மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்றுள்ளது. ராமாயணத்தில் ராவணனின் அரசவையில், வானர அரசன் வாலியின் மகன் அங்கதனின் காலைக் கூட அசைக்க முடியாமல் தோற்பார்கள். அதுபோன்ற நிலைதான் சத்தீஸ்கரின் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும்.

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கவும், அவரை விமர்சிக்கவும் ராகுல் காந்திக்கு தகுதி இல்லை. ஏனெனில், அவரது காங்கிரஸ் கட்சியும், அவரது குடும்பத்தினரும் 60 ஆண்டு காலமாக இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். ஆனால், இப்போது வரை தேசத்தின் அடித்தட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும் சென்று சேரவில்லை. அவர்கள் ஆட்சியின் சாதனைகளை ராகுல் காந்தி முதலில் விளக்க வேண்டும்.

அவர்களது ஆட்சியில் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கு மின்சார வசதி சென்று சேரவில்லை. விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால், இப்போதைய அரசு அவை அனைத்தையும் சாதித்து வருகிறது.

பிரதமர் மோடியின் பணிகள் குறித்து கணக்குக் கேட்பதைவிட்டு, தங்கள் குடும்பம் 4 தலைமுறை ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தது? என்பதை ராகுல் யோசிக்க வேண்டும் என்றார் அமித்ஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து