தமிழகத்திற்கான நிதியை தந்து மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் முதல்வர் எடப்பாடி நம்பிக்கை

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
Edappadi 06-09-2018

சென்னை,தமிழகத்திற்கான நிதியை தந்து மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று தாம் நம்புவதாகவும், மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் மத்திய அரசு சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதிகளை ஒதுக்குவது தொடர்பான பரிந்துரைகளை நிதிக் குழு அளிக்கும். இதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு அளிக்கப்படும். அந்த வகையில், நிதிகளை அளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பாக, மாநில வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நிதிக் குழு நடத்தி வருகிறது.

நிதிக்குழு ஆலோசனை:அதன் அடிப்படையில் 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங், உறுப்பினர்கள் அனூப் சிங், அசோக் லகிரி, ரமேஷ் சந்த், செயலாளர் அரவிந்த் மேத்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். இக்குழுவினர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நிதி, பொருளாதாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து நிதிக் குழு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்,

நிதியை வழங்க வேண்டும்:தமிழகத்திற்கு நிதிப்பகிர்வு சமீப காலமாக குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் மத்திய அரசு சமநிலையை கடைபிடிக்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு மானிய தொகையை குறைத்து வருவது கவலையளிக்கிறது.  மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தும் தமிழகத்திற்குரிய நிதியை வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கு இழப்பு:இதற்கு முன் நிதிக்குழு குறைத்த நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் சத்துணவு போன்ற திட்டங்களை இலவச திட்டத்தின் கீழ் நிதிக்குழு கொண்டு வரக்கூடாது. மாநிலங்களுக்கான நிதியை தராததால், தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்கான நிதியை தந்து 8 கோடி தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புவதாக கூறினார்.
சென்னையில் ஆலோசனைக் கூட்டங்களை முடித்துக் கொண்டு, வரும் 8 மற்றும் 9 -ம் தேதிகளில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் செல்லும் நிதிக் குழு, அங்கு களஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கிறது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து