முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை : சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
supreme court 2017 8 3

புது டெல்லி,முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.

அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். அதேநேரம், சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து