அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: மேடிசன் கெய்ஸ் அரையிறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      விளையாட்டு
Madison Keys 2018 9 6

நியூயார்க் : அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கெய்ஸ் கர்லா சுவாரஸ் நவர்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சுவாரஸ் நவர்ரோ

அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் - 30-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் கர்லா சுவாரஸ் நவர்ரோ பலப்பரீட்சை நடத்தினார். சொந்த மண்ணில் விளையாடிய மேடிசன் கெய்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேடிசன் கெய்ஸ்

சொந்த ரசிகர்கள் முன்னிலையில் அசத்திய கெய்ஸ்க்கு முன் நவர்ரோவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் கெய்ஸ் 6-4, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நவர்ரோ காலிறுக்கு முந்தைய சுற்றில் மரியா ஷரபோவாவையும், அதற்கு முன் 6-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து