முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5- வது பெரிய அணு ஆயுத நாடாக பாக். உருவாகும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், உலகின் 5-வது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகலாம் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது தொடர்ந்தால் இந்த அணுஆயுதங்கள் எண்ணிக்கை 220 முதல் 250 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி நியூக்ளியர் போர்சஸ் 2018 என்ற தலைப்பில் ஹன்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரிஸ், ஜூலி டைமண்ட் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பாகிஸ்தானில் 140 முதல் 150 அணு ஆயுதங்கள்வரை உள்ளன. தற்போது 2025-ம் ஆண்டுக்குள் 220 முதல் 250 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளங்களில் உள்ள சாட்டிலைட் படங்களைஅடிப்படையாக வைத்து நாங்கள் இதனை தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு பாகிஸ்தான் முன்னேறினால் இன்னும் சில வருடங்களில் உலகின் ஐந்தவாது பெரிய ஆணுஆயுதங்களை கொண்ட நாடாக மாறும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அணு ஆயுத வளர்ச்சியை எப்படி கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்தே பாகிஸ்தான் அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து