10-ம் தேதி நடைபெறும் பாரத் பந்த்திற்கு காங். அழைப்பு - தி.மு.க. ஆதரவு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தமிழகம்
Anna in arivalayam 2017-12 31

சென்னை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 10-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பாரத் பந்த்திற்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

இது குறித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் வரும் 10-ம் தேதி காங்கிரஸ், நடத்தும் நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். பெட்ரோல் - டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.100-ஐ நெருங்கி வருவது கவலை அளிக்கிறது. பாரத் பந்த் முழு அளவில் வெற்றி அடைய, தி.மு.க. அனைத்து வகையிலும் ஒத்துழைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெட்ரோல் விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இதே போல் இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக 10-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து