தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திக்கு வளம் சேர்க்க உதவும்: பிரதமர்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
modi 2018 09 07

புது டெல்லி, தமிழ் மொழியால் இந்திக்கு வளம் சேர்க்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது அதிகாரிகள் எல்லாரும் இந்தியில்தான் பேச வேண்டும் என்று சொல்கிறார்.

டெல்லியில் மத்திய இந்தி கமிட்டியின் 31-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது,

சிக்கலான தொழில்நுட்ப வார்த்தைகளை எல்லாம் இந்தியில் பேச முயற்சிக்க வேணாம். அப்படி பேசினால் இந்தி மொழி நிச்சயம் மக்களை போய் சேராது. அதே மாதிரி சுத்தமான இந்தியில்தான் பேசணும்னு மட்டும் நினைச்சிடாதீங்க. அதுவும் மக்களை போய் சேராது. அதனால் மக்கள் பயன்பாட்டில் கலந்துள்ள மொழியைத்தான் பயன்படுத்தணும். அதிகாரிகள் தங்களது அன்றாட உரையாடல் மூலம் இந்தியை பரப்ப வேண்டும். மொத்தத்தில் அரசுத்துறைகளிலும், சமூகத்திலும் இந்தி மொழி பயன்படுத்தப்படும் முறைகளில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இந்தியை பரப்ப கல்வி நிறுவனங்களும் உதவ வேண்டும். உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதில் இந்தியர்கள் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திக்கு வளம் சேர்க்க உதவும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து