முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு மோடியிடம் எந்த பயமும் இல்லை சந்திரசேகர் ராவ் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், எனக்கு மோடியோ அல்லது வேறு யாரையுமோ பார்த்து எந்த பயமும் இல்லை, மக்களைப் பார்த்துத்தான் பயப்படுவேன் என்று தெலங்கானாவின் காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனிடம் அளிக்கப்பட்டது.

அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார் மேலும் புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர் ராவே காபந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என கவர்னர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் நடைபெற்று வந்த நடப்பு தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களில் அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல 105 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிரடியாக பதில்களை அளித்தார்.
அதில் சில கேள்விகளும், பதில்களும்..

கேள்வி: முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவது டி.ஆர்.எஸ்.-க்கு பலனளிக்குமா?
பதில்: ஏன் இல்லை? என்.டி.ஆர். போலத்தான் டி.ஆர்.எஸ். தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னா ரெட்டி தோல்வி அடைந்துவிட்டார். ஆனால் தெலங்கானா எனும் தனி மாநிலத்தை நான் சாதித்துள்ளேன். என்டிஆரை விடவும் நான் சிறந்தவன் என்பதை நிரூபிப்பேன்.
கேள்வி: எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
பதில்: தெலங்கானாவில் 100 தொகுதிகளை வெல்வோம். எங்கள் கட்சியின் வெற்றிக்கு அருகில் கூட யாராலும் வர முடியாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தால் கூட எங்கள் கட்சியை தோற்கடிக்க முடியாது.
கேள்வி: நீங்கள் மோடி அலையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? அதனால்தான் முன்கூட்டியே தேர்தலுக்கு ஆயத்தமாகிறீர்களா?
பதில்:. இந்த சந்திரசேகர் ராவ் மோடியைப் பார்த்தோ அல்லது வேறு யாரையும் பார்த்து பயப்பட மாட்டான். மக்களுக்கு மட்டுமே பயப்படுவேன்.
கேள்வி: மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பீர்களா?
பதில்: பா.ஜ.க. - டி.ஆர்.எஸ். ஜாதகங்கள் பொருந்தாது. எங்கள் கோத்திரம் வேறு, அவர்களது கோத்திரம் வேறு.
கேள்வி: தெலங்கானாவில் அதிக தொகுதிகளை வெல்ல பா.ஜ.க. விரும்புகிறதே?
எனக்குக் கூடத்தான் பிரதமர் ஆக விருப்பம். என்னால் ஆக முடியுமா? தெலங்கானாவில் பா.ஜ.க.வின் பலத்தை அனைவரும் அறிவர். பெற்ற தொகுதிகளை தக்க வைக்குமா? பாருங்கள்.
கேள்வி: அடுத்த முதல்வர் யார்?
பதில்: எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து